திருக்குறள் அணி இலக்கணம்

வணக்கம் மாணவர்களே!

டிஎன்பிஎஸ்சி (TNPSC) மற்றும் பள்ளித் தேர்வுகளில் "இக்குறளில் பயின்று வரும் அணி எது?" என்ற வினா அடிக்கடி கேட்கப்படுகிறது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து திருக்குறள் அணிகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

இதை ஒருமுறை படித்துக் கொண்டாலே, அணி இலக்கணத்தில் முழு மதிப்பெண்களை எளிதாகப் பெறலாம்.

1. உவமை அணி
அணிகளில் முதன்மையானது. 'போல', 'புரைய', 'அற்று' போன்ற உவம உருபுகள் வெளிப்படையாக வருவது.
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலம்தீமை யால்திரிந்து அற்று.
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி.
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துநீர் பெய்திரீஇ யற்று.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.
மக்களே போல்வர் கயவர்; அவரன்ன
ஒப்பாரி யாம்கண்ட தில்.
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை.
நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று.
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடன்உறைந் தற்று.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்கு.
2. ஏகதேச உருவக அணி
இரு பொருட்களில் ஒன்றை உருவகப்படுத்தி, மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது.
சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ(டு)
ஐந்துசால்பு ஊன்றிய தூண்.
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு)
ஆழி எனப்படு வார்.
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.
3. சொற்பொருள் பின்வருநிலையணி
முன்னர் வந்த சொல்லும் பொருளும் பின்னர்ப் பல இடங்களிலும் வருவது.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.
இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாந் தலை.
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
4. பிறிது மொழிதல் அணி
உவமையை மட்டும் கூறி, பொருளைப் பெற வைப்பது.
கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து.
கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் எந்தல் இனிது.
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.
5. சொல் பின்வருநிலையணி
வந்த சொல்லே மீண்டும் வந்து வேறு பொருளைத் தருவது.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
6. பொருள் பின்வருநிலையணி
வந்த சொல்லின் பொருளே மீண்டும் மீண்டும் வருவது (சொல் வேறு, பொருள் ஒன்று).
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.
7. உருவக அணி
உவமையும் பொருளும் வேறு வேறு அல்ல, ஒன்றே என்று கூறுவது.
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.
8. வஞ்சப் புகழ்ச்சி அணி
புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதும்.
தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழுக லான்.
9. வேற்றுமை அணி
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
10. இல்பொருள் உவமை அணி
உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவது.
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
11. தொழில் உவமை அணி
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார்.
12. எடுத்துக்காட்டு உவமையணி
பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.
13. நிரல்நிறை அணி
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

முடிவுரை

மேற்கண்ட அணிகள் அனைத்தும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான சமச்சீர் கல்விப் புத்தகங்களிலிருந்து தொகுக்கப்பட்டவை. இவை TNPSC Group 4, Group 2 தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளவை. தொடர்ந்து இதுபோன்ற தமிழ் இலக்கணக் குறிப்புகளைப் பெற, எங்கள் தளத்துடன் இணைந்திருங்கள்.

- வெற்றி நிச்சயம்!