மருத்துவக் குறிப்புகள்
சீரகம்
- சாப்பிட்ட உணவு செரிக்கச் செய்யும் - சீரகம்.
- சீர்+அகம் = சீரகம். (வயிற்றையும் அகத்தையும் (மனத்தையும்) சீர் செய்தல்)
- சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைசுற்றல், மயக்கம் நீங்கிவிடும்.
- திராட்சை ஜீஸ்-உடன் சீரகம் கலந்து பருகிவர இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
- அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயமாக சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.
- மோருடன் இஞ்சி, சீரகம், சிறிது உப்பு சேர்த்து பருகினால் வாயுத்தொல்லை நீங்கும்.
- சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாற்றில் ஒரு நாள் ஊறவைத்து, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டால் பித்தம் மொத்தமாக குணமாகும்.
- இரண்டு கிராம் சிரகத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வர வாய்ப்புண் குணமாகும்.
சீத்தாப்பழம்
- சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளைக் கொண்டது.
- ஆங்கிலத்தில் சீத்தாப் பழத்திற்கு கஸ்டர்ட் ஆப்பிள் என்று பெயர்.
- சீத்தாப்பழ விதைப் பொடியை தலையில் தேய்த்து குளித்தால் முடி உதிராது.
- சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்து வந்தால் எலும்பும் பல்லும் உறுதியாகும்.
- சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும், காசநோய் கட்டுப்படும்.
- வாதத்தை தீர்க்கும் பழங்களில் முதன்மையானது.
- இதில் வைட்டமின்கள் பி, சி, மக்னீசியம், நார்ச்சத்து, இரும்புச் சத்துக்கள் நிரம்பியுள்ளன.
- 100 கிராம் சீத்தாப்பழத்தில் 94 கலோரிகள் உள்ளது
வெண்டைக்காய்
- வெண்டைக்காயின் சுபாவம் குளிர்ச்சி
- வெண்டைக்காயுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும்.
- இதில் உள்ள பெக்டின் மற்றும் கோந்துத்தன்மையினால் வழவழப்பாக உள்ளது.
- இதிலுள்ள பெக்டின் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
- இதில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, கால்சியம், இரும்புச்சத்துக்கள் வைட்டமின்கள் பி, சி மற்றும் கே ஆகிய உயிர்ச்சத்துக்கள் உள்ளன.
- வெண்டைக்காய் உண்டு வந்தால் சிறுநீர் பெருகும், சுடு தணியும், உஷ்ணம், இருமல் குணமாகும்.
மாம்பழம்
- ராஜகனியான மாம்பழம் முக்கனிகளில் முதல் கனியாகும்.
- மாம்பழத்தின் பூர்வீகம் தென்னிந்தியா தான்.
- மாம்பழம் உடலுக்கு உஷ்ணம் தரும் பழம்தான். ஆனால் சமையலுக்குப் பயன்படுத்தும் புளியில் உள்ள உஷ்ணத்தை விட குறைவு.
- நன்கு கனிந்த மாம்பழத்தை உணவு உண்டபின் 20 நிமிடம் கழித்து மட்டுமே சாப்பிட வேண்டும்.
- இதில் சோடியம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் அதிகமாக உள்ளது.
- இதில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் இருப்பதால், ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.