குடியரசுத் தலைவர்
குடியரசுத் தலைவருக்கான தகுதிகள் மற்றும் தேர்தல் (உறுப்பு 58)
- இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
- 35 வயதைப் பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும்.
- மக்களவை உறுப்பினராவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டிருத்தல் வேண்டும்.
- மத்திய, மாநில அல்லது உள்ளாட்சி அமைப்புகளிலோ அவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள எந்த ஒரு அமைப்பிலோ ஆதாயம் தரக்கூடிய எந்தப் பதவியில் இருந்தாலும், அவர் குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவராகிறார்.
- மேலும், அரசமைப்பின் 52-வது உறுப்பு, குடியரசுத்தலைவர் பதவிக்கான வேட்பாளர், குறைந்தபட்சம் 50 தேர்வுக்குழு வாக்காளர்களால் முன்மொழியப்பட வேண்டும் என்றும், மேலும் 50 தேர்வுக்குழு உறுப்பினர்கள் மூலம் வழிமொழியப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. ஒவ்வொரு வேட்பாளரும் ₹15,000/-ஐ இந்திய ரிசர்வ் வங்கியில் வைப்புத்தொகையாகக் கட்ட வேண்டும்.
- நாடாளுமன்றத்தின் ஈரவைகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்.
- மாநில சட்டமன்றங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்.
- டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்றங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்.
குடியரசுத்தலைவரின் பதவிப் பிரமாணம்
- பதவியில் உண்மையுடன் பணியாற்றுவது.
- அரசமைப்பு மற்றும் சட்டத்தைப் பாதுகாப்பது.
- இந்திய மக்களின் சேவை மற்றும் நல்வாழ்விற்காகத் தன்னை அர்ப்பணிப்பது.
குடியரசுத்தலைவருக்கான வசதிகள் அல்லது சலுகைகள்
- அவரது அதிகாரப்பூர்வ இல்லமான குடியரசுத்தலைவர் மாளிகையை (ராஷ்டிரபதி பவன் - டெல்லி) வாடகையின்றிப் பயன்படுத்த அவருக்கு உரிமை உண்டு.
- நாடாளுமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து ஊதியம், படிகள், தனி உரிமைகளையும் அனுபவிக்க அவருக்கு உரிமை உண்டு.
- அவர் தனது அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து தனிப்பட்ட விலக்கு பெறுகிறார். அவரது பதவிக் காலத்தின்போது, அவருக்கு அனைத்து குற்றவியல் நடவடிக்கைகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது.
பதவிக்காலம், பதவி நீக்கம், பதவியை நிரப்புவது பற்றிய விதிமுறைகள்
பதவிக்காலம்
- குடியரசுத்தலைவர், தனது அலுவலகத்தில் நுழைந்த நாளிலிருந்து ஐந்து வருட காலத்திற்குக் குடியரசுத்தலைவராகப் பதவி வகிப்பார் என்று இந்திய அரசமைப்பு உறுப்பு 56 கூறுகிறது.
- எனினும், குடியரசுத் துணைத்தலைவரிடம் பதவி விலகல் கடிதத்தைக் கொடுப்பதன் மூலம் எந்த நேரத்திலும் தனது பொறுப்பிலிருந்து விலக முடியும்.
- நாடாளுமன்றத்தால் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலமும், குற்றம் சாட்டப்படுவதன் மூலமும் அவரைப் பதவி நீக்கம் செய்ய முடியும்.
- குடியரசுத்தலைவராக இருப்பவர் மீண்டும் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படத் தகுதியுடையவராவார்.
பதவி நீக்கம் (குற்றச்சாட்டு)
- அரசமைப்பின் 61-வது உறுப்பு, குடியரசுத்தலைவர் மீது குற்றம் சாட்டி கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு ஒரு விரிவான நடைமுறைகளைத் தந்துள்ளது.
- இதன்படி, நாடாளுமன்றத்தின் எந்தவொரு அவையிலும், அதன் மொத்த உறுப்பினர்களில் நான்கில் ஒரு பகுதியினரால் கையொப்பமிடப்பட்ட தீர்மானத்தின் மூலம் ஒரு குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டும். இதற்குக் குறைந்தபட்சம் 14 நாட்கள் முன்கூட்டியே அறிவிப்பு வழங்கப்பட வேண்டும்.
- அத்தகைய தீர்மானம் ஒரு சபையால் விவாதிக்கப்பட்டு, அவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கிற்குக் குறையாத பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட வேண்டும்.
- பின்னர், அது மற்ற அவையால் விசாரணை செய்யப்பட வேண்டும். விசாரணையின் முடிவில், அந்த அவையும் தனது மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையினரின் ஒப்புதலுடன் அத்தீர்மானத்தை நிறைவேற்றினால், அந்த நாள் முதல் குடியரசுத்தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்படுவார்.
குடியரசுத் தலைவரின் பணிகளும் அதிகாரங்களும்
- நாடாளுமன்றத்தைக் கூட்டுவது, உரையாற்றுவது, ஒத்திவைப்பது.
- பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 12 உறுப்பினர்களை மாநிலங்களவைக்கும், இரண்டு ஆங்கிலோ-இந்தியப் பிரதிநிதிகளை மக்களவைக்கும் நியமனம் செய்வது.
- நாடாளுமன்றத்திலிருந்து வரும் நிதி சாராத மசோதாக்களை மீண்டும் மறுபரிசீலனை செய்வதற்காகத் திருப்பி அனுப்பவும், ரத்து செய்யவும் அதிகாரம்.
- பிரதமர் தலைமையிலான அமைச்சரவையை நியமிப்பது.
- அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பது.
- நெருக்கடி நிலைக் காலத்தில் எல்லையற்ற அதிகாரங்களைப் பெறுவது. எந்தச் சட்டத்தையும் தற்காலிகமாக முடக்குவது, மரண தண்டனையைக் குறைப்பது.
- குடியரசுத்தலைவர் இல்லாதபோது அவரது பதவியைத் தற்காலிகமாகக் குடியரசுத் துணைத்தலைவர் அல்லது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி வகிப்பர்.
குடியரசுத் துணைத்தலைவர்
- அமெரிக்க அரசமைப்பினைப் போன்று இந்திய அரசமைப்பும் துணைக்குடியரசுத்தலைவர் பதவியை (இந்திய அரசமைப்பு உறுப்பு-63) வழங்குகிறது. இது நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த பதவியாகும்.
தேர்தல்
தகுதிகள்
- இந்தியாவின் குடிமகனாக இருக்க வேண்டும்.
- 35 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்.
- மாநிலங்களவை உறுப்பினராவதற்குத் தகுதி வாய்ந்தவராக இருக்க வேண்டும்.
- ஊதியம் பெறும் எந்தப் பதவியிலும் இருக்கக்கூடாது.
பதவிக்கான வரையறைகள்
- குடியரசுத் துணைத்தலைவர் ஐந்து வருட காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
- குடியரசுத் தலைவரிடம் தனது பதவி விலகல் கடிதத்தை கொடுப்பதன் மூலம் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாக அவர் தனது பதவியிலிருந்து தாமாகவே பதவி விலகலாம்.
- மாநிலங்களவை உறுப்பினர்களின் அறுதிப் பெரும்பான்மை ஆதரவோடு, மக்களையின் ஒப்புதலோடு அவருக்கெதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுவதின் மூலம் அப்பதவியிலிருந்து அவரை நீக்க முடியும். ஆனால் அத்தகைய தீர்மானத்திற்கு 14 நாட்கள் முன்னறிவிப்பு அவசியமாகும்.
பதவிக்காலம் மற்றும் பொறுப்புகள்
- ஐந்து வருட காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
- மாநிலங்களவையின் அலுவல்வழித் தலைவராக (Ex-officio Chairman) செயல்படுவார் (உறுப்பு 64).
- மாநிலங்களவையின் தலைவர் என்ற நிலையில் மட்டுமே இவர் ஊதியம் பெறுகிறார். ஏனெனில் குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்கு என எந்த ஊதியமும் இல்லை.
- குடியரசுத்தலைவரின் இறப்பு அல்லது பதவி நீக்கம் காரணமாகப் பதவி காலியாகும்போது, ஆறு மாத காலத்திற்கு அவர் குடியரசுத்தலைவர் பதவியை வகிப்பார்.
- இந்திய குடியரசுத் தலைவராக செயல்படும்போது குடியரசுத் துணைத் தலைவரின் ஊதியம், இதர படிகள், நாடாளுமன்ற முடிவுகளின்படி பெறுகிறார். அதே நேரத்தில் அவர் மாநிலங்களவையின் தலைவராக செயல்பட முடியாது.
பிரதமர்
பிரதமர்
பிரிட்டிஷ் நாடாளுமன்ற ஆட்சிமுறையை, அதாவது பிரதமரை அரசாங்கத்தின் தலைவராகக் கொண்டுள்ள முறையை இந்திய அரசமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. பிரதமர் அமைச்சரவையில் சமமானவர்களில் முதன்மையானவராகத் திகழ்கிறார்.
நியமனம்
பிரதமரின் தேர்வு மற்றும் நியமனம் பற்றிய குறிப்புகள் எதுவும் அரசமைப்பில் இல்லை. - பிரதமர் பதவிக்கு நேரடித் தேர்தல் எதுவும் இல்லை.
- அரசமைப்பின் 75-வது உறுப்பு பிரதமரைக் குடியரசுத்தலைவர் நியமனம் செய்வதாகக் கூறுகிறது.
- ஆனால் பிரதமரைத் தன்னிச்சையாகக் குடியரசுத்தலைவர் தேர்வு செய்ய இயலாது. மக்களவையில் பெரும்பான்மையுள்ள கட்சி அல்லது கட்சிகளின் கூட்டணியின் தலைவரையே பிரதமராகக் குடியரசுத்தலைவர் நியமனம் செய்கிறார்.
- எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பெரும்பான்மை ஆதரவைத் திரட்டக்கூடியவர் எனக் குடியரசுத்தலைவரால் கருதப்படுகின்ற ஒருவரைப் பிரதமராக நியமனம் செய்வார்.
- பிரதமருக்கெனக் குறிப்பிட்ட பதவிக்காலம் எதுவும் இல்லை. பெரும்பான்மை கொண்ட கட்சி அல்லது கட்சிகளின் தலைவராக இருக்கும் வரையில் அவரே பிரதமராகத் தொடர்வார்.

பணிகள்
பிரதமரின் முதன்மையானதும் முக்கியமானதுமான பொறுப்பு அவரது அமைச்சரவையின் உறுப்பினர்கள் பட்டியலைத் தயாரிப்பதே. அவர் அந்தப் பட்டியலுடன் குடியரசுத்தலைவரைச் சந்தித்து, ஒப்புதல் பெற்றவுடன் அமைச்சரவை அமைக்கப்படுகிறது. மிக முக்கியமான அமைச்சர்கள் காபினெட் அந்தஸ்து கொண்ட அமைச்சர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். மற்றவர்கள் மாநில அமைச்சர்கள் என்றும், மூன்றாம் நிலையிலுள்ளவர்கள் துணை அமைச்சர்கள் என்றும் அறியப்படுவர். பிரதமர் விரும்பினால் ஓர் அமைச்சரைத் துணைப்பிரதமர் என அறிவிக்க முடியும். பிரதமரின் ஆலோசனையின்படிக் குடியரசுத்தலைவர் அமைச்சர்களுக்குரிய துறைகளை ஒதுக்குவார். பிரதமர் எந்தத் துறை அல்லது துறைகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும். அவ்வப்போது அமைச்சர்களின் பொறுப்புகளை மாற்றியமைக்கக் குடியரசுத்தலைவருக்குப் பிரதமர் ஆலோசனை வழங்கலாம். அதுபோன்று ஒரு துறையை இரண்டாகவோ மூன்றாகவோ பிரிக்கலாம் அல்லது இரண்டு, மூன்று துறைகளை ஒரே துறையாகவும் இணைக்கலாம்.
பிரதமரின் முதன்மை நிலை கீழே தரப்பட்டுள்ள காரணிகளால் தெளிவாகிறது.
- மக்களவையின் பெரும்பான்மை கொண்ட கட்சியின் தலைவராக அவர் உள்ளார்.
மற்ற அமைச்சர்களைத் தேர்வு செய்யக் குடியரசுத்தலைவருக்குப் பரிந்துரை செய்யவும், எந்த ஒரு அமைச்சரையும் பதவி நீக்கம் செய்யப் பரிந்துரைக்கவும், பதவி விலகுமாறு கட்டளையிடவும் பிரதமருக்கே அதிகாரமுள்ளது. அமைச்சர்களுக்குப் பொறுப்புகளை ஒதுக்கீடு செய்வது பிரதமரின் பொறுப்பாகும். அதுபோன்று எந்த அமைச்சரையும் ஒரு துறையிலிருந்து வேறொரு துறைக்கு மாற்றவும் அவருக்கு உரிமை உள்ளது. அமைச்சரவையின் தலைவர் பிரதமரே. அதன் கூட்டங்களைக் கூட்டவும், தலைமையேற்று நடத்துவதும், பல குழுக்களின் தலைவரும் பிரதமரே ஆவார். அரசின் கொள்கை முடிவுகளை ஒருங்கிணைத்து அனைத்து துறைகளின் நடவடிக்கைகளையும் மேற்பார்வையிடுகிறார். ஓர் அமைச்சர் தாமாகவே பதவி விலகிவிட்டால், ஓர் அமைச்சர் பதவி காலியிடமாகிறது. ஆனால் ஒரு பிரதமர் பதவி விலகினாலோ, அல்லது இறந்துவிட்டாலோ அவரது அமைச்சரவையே இல்லாமல் போய்விடுகிறது. அமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் இடையில் தொடர்புப் பாலமாக இருப்பவர் பிரதமரே. அதே போன்று நாடாளுமன்றத்திற்கும் அமைச்சர்களுக்கும் இடையில் பாலமாக இருப்பவரும் அவரே. அரசின் வெளிநாட்டு விவகாரங்களை வெளியிடும் முக்கிய நபராகவும் அவர் உள்ளார்.

பிரதமரின் அலுவலகம்
நடைமுறையில் அரசின் தலைவராகவும், உண்மையான நிர்வாகத் தலைவராகவும் இருக்கின்றபடியால், நாட்டின் அரசியல் – நிர்வாக அரங்கில் பிரதமர் மிக முக்கியமான பங்கு வகித்து வருகிறார். அவரது பொறுப்புகளை நிறைவேற்றும் பொருட்டு பிரதமருக்கு உதவியாகப் பிரதமர் அலுவலகம் உள்ளது (PMO – Prime Minister's Office). பிரதமர் அலுவலகம், செயலக உதவிகளையும் ஆலோசனைகளையும் பிரதமருக்கு வழங்குகிறது. இந்திய அரசின் உச்சகட்ட முடிவுகளை வடிவமைக்கும் நிலையிலுள்ள பிரதமர் அலுவலகம் அரசமைப்பால் குறிப்பிடப்படாத ஓர் அதிகார மையமாகத் திகழ்கிறது. பிரதமர் அலுவலகத்திற்கு இந்திய அரசின் துறைகளில் ஒன்று என்ற தகுதி உள்ளது. இந்த அலுவலகம் 1947-இல் உருவாக்கப்பட்டது. 1997 வரை இது பிரதமரின் செயலகம் (PMS – Prime Minister’s Secretariat) என்றே அழைக்கப்பட்டு வந்தது. அரசியல் ரீதியாகப் பிரதமரும், நிர்வாக ரீதியாக முதன்மைச் செயலரும் இதன் தலைமையாகச் செயல்படுவர்.

பிரதமர் அலுவலகத்தின் பல்வேறு பணிகள்
அரசாங்கத்தின் தலைவர் என்ற நிலையில் உள்ள பிரதமருக்குத் தேவையான உதவிகளைச் செய்வது, மத்திய அமைச்சகங்களுடன் / துறைகளுடன் மற்றும் மாநில அரசுகளுடன் தொடர்புகளைப் பராமரிப்பது. நிதி ஆயோக் மற்றும் தேசிய வளர்ச்சிக் குழு போன்றவற்றிற்குத் தேவையான உதவிகளைச் செய்வது. ஊடகங்களுடனும், பொதுமக்களுடனுமான பிரதமரின் தொடர்புகளைப் பராமரிப்பது. பிரதமரின் அலுவல்களுக்கு விதிகளின்படி நடவடிக்கைகளை மேற்கொள்வது. குறிப்பிட்ட விதிகளின்படி பிரதமருக்கு அனுப்பப்படும் விவகாரங்களைப் பற்றி ஆராய்ந்தறிவதற்குப் பிரதமருக்கு உதவுவது. குடியரசுத்தலைவர், ஆளுநர்கள், அயல்நாட்டுத் தூதர்கள் போன்றவர்களுடன் இணக்கமான உறவுகளுக்காகப் பிரதமருக்கு உதவுவது. பிரதமரின் சிந்தனை ஊற்றாகச் செயல்படுவது, பிற துறைகளுக்கும் அமைச்சகங்களுக்கும் ஒதுக்கப்படாத அனைத்து விவரங்களையும் கையாள்வது. அமைச்சரவை தொடர்பான விவகாரங்களில் பிரதமர் அலுவலகம் ஈடுபடுவதில்லை. அமைச்சரவை தொடர்பான விவரங்களை அமைச்சரவைச் செயலகம் நேரடியாகக் கையாள்கிறது. ஆனால் அந்த அமைச்சரவைச் செயலகமும் பிரதமரின் வழிகாட்டுதலின்படியே செயல்படுகிறது.

மத்திய அமைச்சர்கள் குழு
அரசமைப்பு 74-வது உறுப்பின்படிக் குடியரசுத்தலைவருக்கு உதவவும், ஆலோசனை வழங்கவும், பிரதம அமைச்சரைத் தலைவராகக் கொண்ட ஓர் அமைச்சர்கள் குழு இருக்கும். குடியரசுத்தலைவர் தமது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் இந்த அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைப்படி நடந்துகொள்வார். அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையைக் குடியரசுத்தலைவர் ஏற்றுக்கொள்கிறார். அமைச்சர்கள் குழுவில் மூன்று வகையான அமைச்சர்கள் இருப்பர். அவை (1) காபினெட் அமைச்சர்கள் (2) அமைச்சர்கள் (3) துணை அமைச்சர்கள். காபினெட் அமைச்சர்கள் கொள்கை முடிவுகளை எடுப்பதில் ஈடுபடுபவர்கள். மற்ற இரு பிரிவு அமைச்சர்களும் நிர்வாகப் பொறுப்புகளை மேற்கொள்பவர்கள். இந்த மூன்று பிரிவு அமைச்சர்களுக்கும் வெவ்வேறு விதமான பதவி, ஊதியம் உள்ளிட்ட படிகள், அரசியல் முக்கியத்துவம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. அனைவருக்கும் உச்சமாகப் பிரதமர் நாட்டின் மிக உயர்ந்த ஆட்சி அதிகாரம் கொண்டவராக இருக்கிறார்.

அமைச்சர்கள் குழுவின் நியமனம்
அரசமைப்பு 75-வது உறுப்பின்படிக் குடியரசுத்தலைவரால் பிரதமர் நியமிக்கப்படுகிறார். பிரதமரின் ஆலோசனையின் பேரில் மற்ற அமைச்சர்கள் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். குடியரசுத்தலைவரின் விருப்பம் உள்ளவரை அமைச்சர்கள் பதவியில் இருப்பர். குடியரசுத்தலைவரின் விருப்பத்தின் பேரிலேயே அமைச்சர்கள் நியமனம் என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் அவர்கள் பிரதமராலேயே தேர்வு செய்யப்படுகின்றனர். பிரதமரால் பரிந்துரைக்கப்படாத யாரையும் குடியரசுத்தலைவர் அமைச்சராக நியமனம் செய்ய முடியாது.

அமைச்சர்களின் தனிப்பட்ட மற்றும் கூட்டுப்பொறுப்பு
இந்திய அரசமைப்பின்படி அமைச்சர்கள் தனியாகவும், கூட்டாகவும் மக்களவைக்குப் பொறுப்பானவர்கள். கூட்டுப்பொறுப்பு என்பது, அரசின் நடவடிக்கைகளுக்கு அமைச்சரவையின் அனைத்து அமைச்சர்களும் கூட்டாக மக்களவைக்குப் பொறுப்பானவர்கள் ஆகின்றனர் என்று பொருள். அனைத்து அமைச்சர்களும் பொதுவெளியில் தங்களுக்குள்ளான வேறுபாடுகளை வெளிக்காட்டக் கூடாது என்பதும் இதன் பொருள் எனலாம். எந்த ஒரு பொதுப் பிரச்சனையிலும், பொது நிகழ்விலும் அனைத்து அமைச்சர்களும் அரசின் நிலைப்பாட்டை ஒருமித்து ஆதரிக்க வேண்டும்.

ஒன்றிய (மத்திய) அமைச்சர்கள் குழு
அமைச்சரவையின் ஓர் உட்குழுவாக இது இருக்கிறது. அமைச்சரவையிலிருந்து அமைக்கப்படும் இந்த உட்குழு அரசமைப்பில் குறிப்பிடப்படாத ஒன்றாகும். அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் ஒன்றாக அமர்ந்து கொள்கை முடிவுகளை எடுப்பதோ, அலுவல்களை விவாதிப்பதோ இல்லை. மாறாக ஒன்றிய அமைச்சரவைக் குழு எனப்படும் அமைச்சர்குழுவின் உட்குழுவைச் சேர்ந்தவர்கள்தான் பிரதமர் தலைமையில் ஒன்றாகக் கூடி அம்முடிவுகளை எடுக்கிறார்கள். அவற்றை அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைகளாகக் குடியரசுத்தலைவருக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். இந்திய அரசின் நிர்வாக விவகாரங்களைப் பார்த்துக்கொள்ளும் உச்சமான ஆட்சிக் குழுவாக அமைச்சரவைக் குழு விளங்குகிறது. அமைச்சர்கள் குழுவின் கருவாக அது செயல்படுகிறது.

அமைச்சர்கள் குழுவின் செயல்பாடுகள்
- அமைச்சரவைக் குழுதான் உயர்ந்தபட்ச முடிவுகளை எடுப்பதற்கான மற்றும் கொள்கைகளை வகுப்பதற்கான அதிகாரம் பெற்ற அமைப்பாகும்.
இது அனைத்து முக்கியமான சட்ட, நிதி மற்றும் வெளியுறவு விவகாரங்களையும் கையாளுகிறது. அரசமைப்பு ரீதியான அனைத்து நியமனங்களையும் மூத்த செயலக நிர்வாகிகளையும் இது கட்டுப்படுத்துகிறது. நாடாளுமன்றம் நடைபெறாதபோது அவசரச் சட்டங்களைப் பிறப்பிக்கக் குடியரசுத்தலைவருக்குப் பரிந்துரை செய்கிறது. இது விசாரணைக் குழுக்களை நியமிக்கிறது மற்றும் துறைகளுக்கு இடையிலான சிக்கல்களைத் தீர்த்து வைக்கிறது. நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்வதற்கும், மக்களவையைக் கலைத்துவிடவும், நாடாளுமன்றக் கூட்டங்களை முடித்து வைக்க அல்லது ஒத்தி வைக்குமாறுக் குடியரசுத்தலைவருக்குப் பரிந்துரை செய்யவும் அதிகாரம் கொண்டுள்ளது.

அமைச்சரவைக் குழுச் செயலர்
அமைச்சரவைக் குழுவில் உள்ள ஒவ்வொரு அமைச்சருக்கும் உதவி செய்ய ஒரு செயலர் இருப்பர். அத்தகைய அமைச்சரவைக் குழு செயலர்களின் முதன்மை இடம் முதன்மைச் செயலருக்குத் தரப்பட்டுள்ளது. உயர் தேர்வுக் குழுவின் (Board) தலைவராக அவர் இருப்பர். அக்குழுதான் மத்திய தலைமைச் செயலகத்தின் இணைச் செயலர்களை நியமிக்கும். அந்த முதன்மைச் செயலர்தான் ஆண்டுதோறும் நடைபெறும் (மாநில) தலைமைச் செயலர்களின் மாநாடுகளுக்குத் தலைமை வகிக்கிறார். நிர்வாகத்தின் அனைத்து அம்சங்களிலும், கொள்கைகளிலும் பல்வேறு நிர்வாகத்துறைகளுக்கும், நிர்வாகப் பணியினருக்கும், அரசியல் அமைப்புகளுக்கும் இடையில் தொடர்பாகச் செயல்படுபவரும் முதன்மைச் செயலரே ஆவார்.

நிழல் அமைச்சரவை
இங்கிலாந்து நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு துறையிலும் உள்ள விவகாரங்களைப் பற்றி ஆராயத் தமது உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைக்கிறது. இதன் மூலம் எதிர்க்கட்சிகள் அரசு தொடர்பான பிரச்சனைகளைத் தெளிவாக அறிந்து கொள்ளவும் அரசை விழிப்பாக இருக்கச் செய்யவும் முடிகிறது. இது நிழல் அமைச்சரவை என்று அழைக்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளவை
இந்தியக் குடியரசுத் தலைவர்
நடுவண் அரசின் நிர்வாகத் தலைவர் குடியரசுத் தலைவர் ஆவார். அவர் பெயரளவில் நிர்வாக அதிகாரம் பெற்றவர். அவர் இந்தியாவின் முதல் குடிமகன் ஆவார். முப்படைகளின் தலைமைத் தளபதியாகச் செயல்படுகிறார். நடுவண் அரசின் அரசியலமைப்புத் தலைவராகவும் உள்ளார். அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 53-ன் படி குடியரசுத் தலைவர் நேரடியாகவோ அல்லது அவருடைய சார்நிலை அலுவலர்கள் மூலமாகவோ நடுவண் அரசின் நிர்வாக அதிகாரங்களை அரசியலமைப்பின்படி செயல்படுத்துகிறார்.

தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள்
- இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
35 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். நடுவண் அரசிலோ, மாநில அரசிலோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளிலோ ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது. மக்களவை உறுப்பினர் ஆவதற்கான தகுதியினைப் பெற்றிருத்தல் வேண்டும். அவரின் பெயரைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர் குழுமத்திலுள்ள 50 வாக்காளர்கள் முன்மொழியவும் மேலும் 50 வாக்காளர்கள் வழிமொழியவும் வேண்டும்.
குடியரசுத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ பதவி வகிக்கக் கூடாது. ஒருவேளை பதவி வகிக்கும் பட்சத்தில், குடியரசுத் தலைவராக அவர் பதவி ஏற்கும் நாளில் அப்பதவி காலியானதாகக் கருதப்படும்.
புதுதில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் - குடியரசுத் தலைவரின் இல்லம் ஆகும். அவருடைய இல்லம் மற்றும் அலுவலகம் இரண்டும் ஒரே கட்டடத்தில் அமைந்துள்ளன. இருந்தபோதிலும் அவருக்கு இருப்பிடத்துடன் கூடிய அலுவலகங்கள் மேலும் இரண்டு இடங்களில் உள்ளன. அங்கு வருடத்திற்கு ஒரு முறை சென்று தன்னுடைய அலுவலகப் பணிகளை அவர் மேற்கொள்கிறார். அவைகள் சிம்லாவில் உள்ள ரிட்ரீட் கட்டடம் (The Retreat Building) மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ராஷ்டிரபதி நிலையம் ஆகும். இவைகளில் ஒன்று வடக்கிலும் மற்றொன்று தெற்கிலும் அமைந்துள்ளது. இது நாட்டின் ஒற்றுமையையும், மக்களின் பல்வேறுபட்ட கலாச்சாரத்தின் ஒற்றுமையையும் பறைசாற்றுகின்றது.
- இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
35 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். நடுவண் அரசிலோ, மாநில அரசிலோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளிலோ ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது. மக்களவை உறுப்பினர் ஆவதற்கான தகுதியினைப் பெற்றிருத்தல் வேண்டும். அவரின் பெயரைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர் குழுமத்திலுள்ள 50 வாக்காளர்கள் முன்மொழியவும் மேலும் 50 வாக்காளர்கள் வழிமொழியவும் வேண்டும்.
புதுதில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் - குடியரசுத் தலைவரின் இல்லம் ஆகும். அவருடைய இல்லம் மற்றும் அலுவலகம் இரண்டும் ஒரே கட்டடத்தில் அமைந்துள்ளன. இருந்தபோதிலும் அவருக்கு இருப்பிடத்துடன் கூடிய அலுவலகங்கள் மேலும் இரண்டு இடங்களில் உள்ளன. அங்கு வருடத்திற்கு ஒரு முறை சென்று தன்னுடைய அலுவலகப் பணிகளை அவர் மேற்கொள்கிறார். அவைகள் சிம்லாவில் உள்ள ரிட்ரீட் கட்டடம் (The Retreat Building) மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ராஷ்டிரபதி நிலையம் ஆகும். இவைகளில் ஒன்று வடக்கிலும் மற்றொன்று தெற்கிலும் அமைந்துள்ளது. இது நாட்டின் ஒற்றுமையையும், மக்களின் பல்வேறுபட்ட கலாச்சாரத்தின் ஒற்றுமையையும் பறைசாற்றுகின்றது.
குடியரசுத் தலைவருக்கானத் தேர்தல்
குடியரசுத் தலைவர், ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தின்படி வாக்காளர் குழுமத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். வாக்காளர் குழுமம் என்பது மாநிலங்களவை மற்றும் மக்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், தேசிய தலைநகர் டெல்லி மற்றும் புதுச்சேரியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாகும். குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியேற்பு உறுதிமொழி செய்து வைக்கிறார். குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும். அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படத் தகுதி உடையவர் ஆவார்.

குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்
நிர்வாக அதிகாரங்கள்
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 77-ன் படி நடுவண் அரசின் ஒவ்வொரு நிர்வாக நடவடிக்கையும் குடியரசுத் தலைவரின் பெயராலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். பிரதம அமைச்சரையும், மற்ற அமைச்சர்களையும் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். அவர் பிரதம அமைச்சரின் ஆலோசனையின்படி அமைச்சரவை உறுப்பினர்களுக்குத் துறைகளை ஒதுக்கீடு செய்கிறார். இந்தியாவின் மிக முக்கியப் பதவிகளான மாநில ஆளுநர்கள், உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள், இதர நீதிபதிகள், இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர், தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள், நடுவண் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் இதர உறுப்பினர்கள், மற்ற நாடுகளுக்கான தூதர்கள் மற்றும் உயர் ஆணையர்கள் ஆகியோரைக் குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்.
சட்டமன்ற அதிகாரங்கள்
பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை இவர் உரையாற்றித் துவக்கி வைக்கிறார். மேலும் ஒவ்வொரு ஆண்டின் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் இவருடைய உரையுடன் துவங்குகிறது. குடியரசுத் தலைவர் ஆண்டுக்கு இரண்டுமுறை நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறார். அவர் நாடாளுமன்றத்தின் எந்தவொரு அவையிலும் ஒரு சட்ட மசோதா நிலுவையில் இருந்தாலும் அது குறித்துச் செய்தியை நாடாளுமன்றத்திற்கு அனுப்பலாம். கு டியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பின்னரே அனைத்து மசோதாக்களும் சட்டமாகின்றன. - நிதி மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யமுடியாது.
- நாடாளுமன்றத்தின் இரு அவைகளையோ அல்லது ஏதேனும் ஒரு அவையின் கூட்டத்தையோ குடியரசுத்தலைவர் முடிவுக்குக் கொண்டுவரலாம்.
- மக்களவையின் ஐந்து ஆண்டு காலம் முடியும் முன்னரே அதனைக் கலைக்கும் அதிகாரமும் இவருக்கு உண்டு. இலக்கியம், அறிவியல், விளையாட்டு, கலை மற்றும் சமூகப் பணி ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் 12 நபர்களைக் குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு நியமிக்கிறார். மேலும் ஆங்கிலோ-இந்தியர் சமூகத்தைச் சேர்ந்த 2 நபர்களை மக்களவையில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்று கருதும்பட்சத்தில் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
நிதி அதிகாரங்கள்
நடுவண் அரசின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினைக் குடியரசுத் தலைவரின் அனுமதி பெற்ற பின்னரே நடுவண் நிதி அமைச்சர் மக்களவையில் சமர்ப்பிக்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய அவசரகால நிதியினைக் குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ளது. அவரின் பரிந்துரை இன்றி எந்தவொரு மானியக் கோரிக்கையையும் கொண்டுவர முடியாது. இந்தியாவின் அவசர நிதியிலிருந்து அரசின் எதிர்பாராத செலவினங்களை மேற்கொள்ளும் அதிகாரம் அவருக்கு மட்டுமே உண்டு. ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு நிதிக்குழுவினை அமைக்கிறார்.
நீதி அதிகாரங்கள்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72-வது சட்டப்பிரிவு நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒருவரின் தண்டனையைக் குறைக்கவும், ஒத்திவைக்கவும், தண்டனையிலிருந்து விடுவிக்கவும், மன்னிப்பு வழங்கவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
இராணுவ அதிகாரங்கள்
நடுவண் அரசின் பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதி என்ற அதிகாரத்தைச் சட்டப்பிரிவு 53(2) குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது. அவர் சட்டத்தின்படி இராணுவத்தை வழிநடத்துகிறார்.
இராஜதந்திர அதிகாரங்கள்
வெளிநாடுகளுக்கான இந்தியத் தூதர்களைக் குடியரசுத் தலைவர் நியமிப்பதோடு மட்டுமல்லாமல், அவர் இந்தியாவுக்கான வெளிநாட்டுத் தூதர்களையும் வரவேற்கிறார். வெளிநாடுகளுக்கான அனைத்து உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும் குடியரசுத் தலைவரின் பெயராலேயே நடைபெறுகின்றன.
நெருக்கடி நிலை அதிகாரங்கள்
நெருக்கடி நிலையை அறிவிக்கும் அதிகாரம் 352-வது சட்டப்பிரிவிலும், மாநில அரசைக் கலைக்கும் அதிகாரம் 356-வது சட்டப்பிரிவிலும், நிதி நெருக்கடியை அறிவிக்கும் அதிகாரம் 360-வது சட்டப்பிரிவிலும் உள்ளது.
கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் அதிகபட்சமாக 9 முறை குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
நிர்வாக அதிகாரங்கள்
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 77-ன் படி நடுவண் அரசின் ஒவ்வொரு நிர்வாக நடவடிக்கையும் குடியரசுத் தலைவரின் பெயராலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். பிரதம அமைச்சரையும், மற்ற அமைச்சர்களையும் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். அவர் பிரதம அமைச்சரின் ஆலோசனையின்படி அமைச்சரவை உறுப்பினர்களுக்குத் துறைகளை ஒதுக்கீடு செய்கிறார். இந்தியாவின் மிக முக்கியப் பதவிகளான மாநில ஆளுநர்கள், உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள், இதர நீதிபதிகள், இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர், தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள், நடுவண் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் இதர உறுப்பினர்கள், மற்ற நாடுகளுக்கான தூதர்கள் மற்றும் உயர் ஆணையர்கள் ஆகியோரைக் குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்.
சட்டமன்ற அதிகாரங்கள்
பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை இவர் உரையாற்றித் துவக்கி வைக்கிறார். மேலும் ஒவ்வொரு ஆண்டின் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் இவருடைய உரையுடன் துவங்குகிறது. குடியரசுத் தலைவர் ஆண்டுக்கு இரண்டுமுறை நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறார். அவர் நாடாளுமன்றத்தின் எந்தவொரு அவையிலும் ஒரு சட்ட மசோதா நிலுவையில் இருந்தாலும் அது குறித்துச் செய்தியை நாடாளுமன்றத்திற்கு அனுப்பலாம். கு டியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பின்னரே அனைத்து மசோதாக்களும் சட்டமாகின்றன.- நிதி மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யமுடியாது.
- நாடாளுமன்றத்தின் இரு அவைகளையோ அல்லது ஏதேனும் ஒரு அவையின் கூட்டத்தையோ குடியரசுத்தலைவர் முடிவுக்குக் கொண்டுவரலாம்.
- மக்களவையின் ஐந்து ஆண்டு காலம் முடியும் முன்னரே அதனைக் கலைக்கும் அதிகாரமும் இவருக்கு உண்டு. இலக்கியம், அறிவியல், விளையாட்டு, கலை மற்றும் சமூகப் பணி ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் 12 நபர்களைக் குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு நியமிக்கிறார். மேலும் ஆங்கிலோ-இந்தியர் சமூகத்தைச் சேர்ந்த 2 நபர்களை மக்களவையில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்று கருதும்பட்சத்தில் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
நிதி அதிகாரங்கள்
நடுவண் அரசின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினைக் குடியரசுத் தலைவரின் அனுமதி பெற்ற பின்னரே நடுவண் நிதி அமைச்சர் மக்களவையில் சமர்ப்பிக்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய அவசரகால நிதியினைக் குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ளது. அவரின் பரிந்துரை இன்றி எந்தவொரு மானியக் கோரிக்கையையும் கொண்டுவர முடியாது. இந்தியாவின் அவசர நிதியிலிருந்து அரசின் எதிர்பாராத செலவினங்களை மேற்கொள்ளும் அதிகாரம் அவருக்கு மட்டுமே உண்டு. ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு நிதிக்குழுவினை அமைக்கிறார்.
நீதி அதிகாரங்கள்
இராணுவ அதிகாரங்கள்
இராஜதந்திர அதிகாரங்கள்
வெளிநாடுகளுக்கான இந்தியத் தூதர்களைக் குடியரசுத் தலைவர் நியமிப்பதோடு மட்டுமல்லாமல், அவர் இந்தியாவுக்கான வெளிநாட்டுத் தூதர்களையும் வரவேற்கிறார். வெளிநாடுகளுக்கான அனைத்து உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும் குடியரசுத் தலைவரின் பெயராலேயே நடைபெறுகின்றன.
நெருக்கடி நிலை அதிகாரங்கள்
நெருக்கடி நிலையை அறிவிக்கும் அதிகாரம் 352-வது சட்டப்பிரிவிலும், மாநில அரசைக் கலைக்கும் அதிகாரம் 356-வது சட்டப்பிரிவிலும், நிதி நெருக்கடியை அறிவிக்கும் அதிகாரம் 360-வது சட்டப்பிரிவிலும் உள்ளது.
கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் அதிகபட்சமாக 9 முறை குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் நீக்கம்
குடியரசுத் தலைவர் தன்னுடைய பணித்துறப்புக் கடிதத்தினைத் துணைக் குடியரசுத் தலைவரிடம் வழங்கலாம். அவர் சட்டப்பிரிவு 61-இன் படி அரசியலமைப்பை மீறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுவதன் மூலம் பதவி நீக்கம் செய்யப்படலாம். இவருக்கு எதிரான இக்குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானமாகக் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். மேலும் அவைக்கு வருகை புரிந்தவர்களில் நான்கில் ஒரு பங்கிற்குக் குறையாமல் ஆதரவு தெரிவிக்க வேண்டும். குடியரசுத் தலைவர் தனது பதவிக்காலம் முடிந்தாலும் அவருக்குப் பின் ஒருவர் பதவியேற்கும் வரை அப்பதவியில் தொடரலாம்.

துணைக் குடியரசுத் தலைவர்
அரசியலமைப்பின் 63-வது சட்டப்பிரிவு இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் பதவியை வழங்குகிறது. நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவியைத் துணைக் குடியரசுத் தலைவர் வகிக்கிறார். அலுவலக முன்னுரிமையின்படிக் குடியரசுத் தலைவருக்கு அடுத்த தர நிலையில் இவர் உள்ளார். இப்பத்வி அமெரிக்கத் துணைக் குடியரசுத் தலைவரின் பதவியைப் போன்றது. நாட்டின் அரசாங்க நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற இப்பத்வி உருவாக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 63-வது சட்டப்பிரிவு இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் பதவியை வழங்குகிறது. நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவியைத் துணைக் குடியரசுத் தலைவர் வகிக்கிறார். அலுவலக முன்னுரிமையின்படிக் குடியரசுத் தலைவருக்கு அடுத்த தர நிலையில் இவர் உள்ளார். இப்பத்வி அமெரிக்கத் துணைக் குடியரசுத் தலைவரின் பதவியைப் போன்றது. நாட்டின் அரசாங்க நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற இப்பத்வி உருவாக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள்
- இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
35 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். நடுவண் அரசிலோ, மாநில அரசிலோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளிலோ ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது. மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கான மற்ற தகுதிகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.

தேர்தல் மற்றும் பதவிக்காலம்
சட்டப்பிரிவு 66(1)-இன் படி குடியரசுத் தலைவர் போலவே துணைக் குடியரசுத் தலைவரும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாமல் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். துணைக் குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். பதவிக்காலம் முடியும் முன்னரே பணித்துறப்பு, இறத்தல், பணிநீக்கம் ஆகிய காரணங்களால் அவரது பதவி முடிவுக்கு வரலாம். அவர் மீண்டும் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கும் தகுதி உடையவராவார். மேலும் புதிய துணைக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை மாநிலங்களவையின் துணைத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவரின் பணிகளை மேற்கொள்வார்.

துணைக் குடியரசுத் தலைவரின் பதவிநீக்கம்
மக்களவையின் ஒப்புதலுடன், மாநிலங்களவையில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் துணைக் குடியரசுத் தலைவரைப் பதவியிலிருந்து நீக்கலாம். இத்தகைய தீர்மானம் கொண்டுவர குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன்னரே துணைக் குடியரசுத் தலைவருக்கு ஓர் அறிவிப்பை வழங்க வேண்டும்.
துணைக் குடியரசுத் தலைவரின் செயல்பாடுகள்
- துணைக் குடியரசுத் தலைவர் மாநிலங்களவையின் தலைவராகச் செயல்படுகிறார்.
மாநிலங்களவையின் நடவடிக்கைகளை முறைப்படுத்துகிறார். மாநிலங்களவையின் மரபு, ஒழுங்கு முறைகளைத் தீர்மானிக்கிறார். மாநிலங்களவையின் தீர்மானம் அல்லது கேள்விகளை அனுமதிப்பதை முடிவு செய்கிறார். மிகப் பெரிய பிரச்சனையின்போது அவையின் நடவடிக்கைகளை அவர் ஒத்திவைக்கவும் அல்லது முடிவுக்குக் கொண்டு வரவும் செய்கிறார். குடியரசுத் தலைவர் உடல்நலக் குறைவால் தனது கடமைகளை ஆற்ற இயலாதபோதும் அல்லது நாட்டில் இல்லாதபோதும் துணைக் குடியரசுத் தலைவர், அதிகபட்சமாக ஆறு மாத காலத்திற்கு அவரின் பணிகளைக் கவனிப்பார்.

முடிவு வாக்கு (Casting vote)
மாநிலங்களவையில் சட்ட மசோதாவின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பு சமநிலையில் இருக்கும் பட்சத்தில், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 100-இன் படி துணைக் குடியரசுத் தலைவர் வாக்களிக்கலாம். இது சட்ட மசோதாவின் ஒப்புதலுக்கு ஒரு வாக்கு மட்டுமே தேவை என்ற நிலையைக் குறிக்கிறது. அவருடைய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எவருக்கும் உரிமை இல்லை.
குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் பதவிகள் ஒரே சமயத்தில் காலியாக இருக்கும் பட்சத்தில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, குடியரசுத் தலைவரின் பணிகளைச் செயலாற்றுவார். 1969-ஆம் ஆண்டு இத்தகைய ஒரு நிகழ்வின் போது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி M. ஹிதயதுல்லா, குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பிரதம அமைச்சர்
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 74(1) குடியரசுத் தலைவருக்கு உதவிடவும், அறிவுரை வழங்கிடவும் பிரதம அமைச்சரைத் தலைவராகக் கொண்ட ஒரு நடுவண் அமைச்சரவைக் குழு இருக்கும் எனக் குறிப்பிடுகிறது. இந்தியாவின் பிரதம அமைச்சர் பதவியானது வெஸ்ட்மின்ஸ்டர் அரசியலமைப்பு ஜனநாயக முறையில் இருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. (இங்கிலாந்தின் நாடாளுமன்றம் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் அமைந்துள்ளதால் அவர்களின் நாடாளுமன்ற முறை வெஸ்ட்மின்ஸ்டர் முறை என்றழைக்கப்படுகிறது). மக்களவையின் பெரும்பான்மைக் கட்சியின் தலைவரைப் பிரதம அமைச்சராகக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். மற்ற அமைச்சர்களைப் பிரதம அமைச்சரின் ஆலோசனையின்படிக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். மக்களவையில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மைப் பலம் இல்லையெனில், குடியரசுத் தலைவர் எந்தக் கட்சி அமைச்சரவையை அமைக்க முடியுமோ அக்கட்சியின் தலைவரை அவர் அழைத்து அரசு அமைக்கக் கூறலாம். குடியரசுத் தலைவர் அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணமும், இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கின்றார். நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாதவர் கூட அமைச்சராக நியமிக்கப்படலாம். ஆனால் அவர் 6 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும். அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும், ஒட்டுமொத்தமாகவும் மக்களவைக்குப் பொறுப்புடையவர்களாவர்.

பிரதம அமைச்சரின் செயல்பாடுகளும், கடமைகளும்
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 78 பிரதம அமைச்சரின் கடமைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது. பிரதம அமைச்சர் அமைச்சர்களின் நிலையை அறிந்து அவர்களுக்கு அரசின் பல்வேறு துறைகளை ஒதுக்கீடு செய்கிறார். தான் தலைமை வகிக்கும், அமைச்சரவைக் கூட்டத்தின் தேதி, நிகழ்ச்சி நிரல் (Agenda) குறித்து முடிவு செய்வார். காபினெட் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறாத பொழுது, பிரதம அமைச்சர் தனது மூத்த சகாக்கள் இருவர் அல்லது மூவரை இயல்பாகக் கலந்தாலோசிக்கலாம். பிரதம அமைச்சர் பல்வேறு துறைகளின் பணிகளை மேற்பார்வையிடுகிறார். நடுவண் அரசின் விவகாரங்கள் மற்றும் சட்டத்திற்கான முன்மொழிவுகள் போன்ற அமைச்சரவையின் அனைத்து முடிவுகளையும் குடியரசுத் தலைவருடன் விவாதிக்கிறார். பிரதம அமைச்சர் என்பவர் குடியரசுத் தலைவருக்கும், அமைச்சரவைக்கும் இடையே பாலமாகச் செயல்படுகிறார். பிரதம அமைச்சர் நாட்டின் உண்மையான தலைவராவார். அவர் நாட்டின் முக்கிய செய்தித் தொடர்பாளராகவும் செயல்படுகிறார். சர்வதேச மாநாடுகளான காமன்வெல்த், அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு, சார்க் நாடுகளின் மாநாடு ஆகியவற்றில் இந்திய நாட்டின் பிரதிநிதியாகப் பிரதமர் பங்கு கொள்கிறார்.
அமைச்சரவைக் குழு
தேர்தலுக்குப் பின்னர் பிரதம அமைச்சரின் ஆலோசனையின்படிக் குடியரசுத் தலைவர் அமைச்சரவையை நியமிக்கிறார். ஒட்டுமொத்த மக்களவை உறுப்பினர்களில் 15% மட்டுமே அமைச்சரவை உறுப்பினர்களாக (பிரதம அமைச்சர் உட்பட) இருத்தல் வேண்டும் என இந்திய அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது.

நடுவண் அமைச்சர்களின் வகைகள்
நடுவண் அமைச்சர்கள் மூன்று தரநிலைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
காபினெட் (அ) ஆட்சிக்குழு அமைச்சர்கள்
இராசாங்க அமைச்சர்கள்
இணை அமைச்சர்கள்
காபினெட் அமைச்சர்கள்
நிர்வாகத்தின் மையக்கருவை உருவாக்கும் மூத்த அமைச்சர்களின் முறைசாரா அமைப்பே காபினெட் ஆகும். காபினெட் அரசாங்கத்தின் பாதுகாப்பு, நிதி, வெளியுறவுக் கொள்கைகள், உள்துறை ஆகியவற்றின் முக்கிய முடிவுகளை எடுக்கிறது.
இராசாங்க அமைச்சர்கள்
அமைச்சரவைக் குழுவின் இரண்டாவது வகையினரே இராசாங்க அமைச்சர்கள் ஆவர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் பொறுப்பு அமைச்சராகச் செயல்படுகின்றனர். ஆனால் அழைப்பு விடுத்ததால் மட்டுமே இவர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வர்.
இணை அமைச்சர்கள்
அமைச்சரவையில் மூன்றாவதாக, இணை அமைச்சர்கள் உள்ளனர். காபினெட் அமைச்சர்கள் (அ) இராசாங்க அமைச்சர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட கடமைகளைச் செயலாற்றுவதில் இவர்கள் உதவி புரிகின்றனர்.
காபினெட் (அ) ஆட்சிக்குழு அமைச்சர்கள் இராசாங்க அமைச்சர்கள் இணை அமைச்சர்கள்